போலிகள்
இதயம் துளைத்தப் போலி உறவுகளால்
இதயம் தொலைத்த எனக்கு
இதய நோய் என்கிறார் .
இதய நோய் மருத்துவர்.
இல்லாத இதயத்துக்கு
நோய் என்று
பொய்யாகக் கூறும் - இவர்
போலி மருத்துவரோ!!!
நன்றி
கனிமொழி இதழ்
கே.பாலசுந்தரி எம்.எ
மாங்குடி
சுனாமி
எங்கள் கழிவுகளை உன்னில்
கலக்கவிட்டதால் எங்களையே
கழிவுகளாய் உன்னில் மிதக்க விட்டாயோ?
வேடந்தாங்கல்
இனப்பெருக்கம் காண
ஏற்ற இடம் இதுவென
அயல் நாட்டுப் பறவைகள்
அத்தனையும் இங்கு வந்தாலும்
தன் குணம் மொழி மாறாமல்
தங்கி இருக்குது வேடந்தாங்கலில்
பணப் பெருக்கம் காணப்
பன்னாடு சென்ற மானுடப்
பறவைகள் மட்டும்
வேற்றுமொழி வெற்று ஆடம்பரம்
வேற்றுக் கலாச்சாரம் எனப் பொய்
வேட(ம் )ந்தாங்கல் ஏன் ?
கனிமொழி இதழ்
பாலசுந்தரி எம்.எ
எனக்குள் துளிர்த்தத் துளிப்பாக்கள்
முதியோர்
முன்னாள் நினைவுகள்
முள்ளாய் குத்தும் நினைவுள்
முதியோரின் மலரும் நினைவுகள்
பிரிவு
பழைய உறவு
பழசாய் ஆனதால்
புதிய உறவின் வரவு!
சரிவு
சரிவுகள் சறுக்கி விழ அல்ல
சடுதியில் மீண்டும்
சாதிக்க!
மறுபக்கம்
தாய்மார்களின் தினம்
தலைமை ஏற்பு
தாயைத் தள்ளி வைத்தவர்!
மருமகள்
மருமகளை மாமியார்
மறுமகளாய் நினைக்கணும்!
மருமகள் மாமியாரை
மாற்றாந்தாயாய் நினைக்கணும்!
மருமகன்
மாமனார்
மறுமகனாய் நினைக்கணும்!
சொத்தில் பங்கு கொடுக்கணும்!
முதியோர் பென்ஷன்
ஊழியம் செய்யாமலே
வாங்கும்
ஓய்வு ஊதியம்!
மரபியல்
மரபியல்கள் மாறாதது என்பதை
மறையிலக்கணமாய் தந்த
மகவுகள்!
மானுடயியல்
உனக்குப் பிடித்ததை
மற்றவர்க்கு செய்
உனக்குப் பிடிக்காததை
உன் எதிரிக்கும் செய்யாதே!
உதவி!
கேட்டது கொடுக்காதே!
கேட்காமலே கொடுத்துவிடு!
பரிணாமம்
தான் பெற்றோராய் ஆனதும்
தன்னைப் பெற்றவரை
உதறித் தள்ளும்
பெற்றெடுத்தப் பிள்ளைகள்!
பரிவு
உறவுகள் மீது மட்டுல்ல
மற்ற
உயிர்களிடமும்!
மழை
விண்ணிலிருந்து
மண்ணுக்குள் இறங்கும்
விழுதுகள்!
காலைச் சூரியன்
வைகறைப் பெண்ணின்
நாணிச் சிவந்த
கன்னம்!
மாலைச் சூரியன்
மாலைப் பெண்ணுக்கு
மஞ்சள் நீராட்டு விழா!
தூறல்
பூக்களுக்குப்
பூப்பு நீராட்டல்
நட்சத்திரங்கள்
வானவீதியில்
வைரக் கண்காட்சி
வைத்தது யார்?
மேகங்கள்
வானத் திரையில்
வண்ணமிகு கிராபிக்ஸ்
வடிவமைத்து யார்?
மனைவி
உண்மைகளை கண்டு பிடிக்கும்
உன்னத கருவி!
ஈவ்டீசிங்
நிலவுப் பெண்ணைக்
கண்ணடிக்கும்
நட்சத்திரக் காளையர்!
காதல்
கண் வழி புகுந்து
இதயம் தாங்கும்
கதிர்வீச்சு!
இடி-மின்னல்-மழை
வானக் கணவன்
மின்னலாய்ப் பாய்ந்து
இடியாய் வசை பாட
மேக மனைவியின் கண்களில்
அருவி!
குடும்பம்
சிரிப்பே அறியாத அப்பா
சீரியலில் மூழ்கும் அம்மா
சீர்திருத்தப் பள்ளியில் பிள்ளை
அம்மா
தொலைந்து போன
தொப்புள் கொடி
தொடர்பு
ஞானகுரு
உன் பிள்ளை இல்லை
என் அப்பா என்று
உணர்த்தும் பேரக் குழந்தைகள்
அகதிகள்
சொந்த நாட்டிலேயே
அகதிகளாக சிறுபான்மை
இனத்தோர்
சொந்த வீட்டிலேயே
அகதிகளாகப் பெரும்பான்மை
முதியோர்
பெண் சிசு
தாய்ப்பால் தவிர்க்கப்பட்டு
கள்ளிப்பால் புகட்டப்படும்
பெண்பால்
மன்னிப்பு
கேட்கத் தயங்குவது
கொடுக்க
மறுப்பது!
மறதி
நம்மை
ஏற்றிவிட்ட
ஏணி
வாரிசு
மனசுக்குள் பட்டாம்பூச்சி
மருமகள்
உண்டாகி இருக்கிறாள்
பாவம்
பெற்றவர்களைப் பட்டினி
போட்டு
மற்றவர்கள்
மனம் குளிர
விருந்து வைப்பது
கணவன்
கணிக்க முடியாத
வானிலை
அறிக்கை
பூமராங்
நம்முடைய பிழைகள்
நம்மையேத் திருப்பித்
தாக்குவது
பக்குவம்
கடந்த வந்த பாதையைக்
காலம் கடந்து
திரும்பிப் பார்ப்பது
கனிவு
கன்னியரிடம் மட்டும்
காளையர் கட்டாயம்
காட்டுவது
நன்றி
தந்த உதவி மறந்திடு
பெற்ற உதவி
மதித்திடு
முரண்.
தாய்மார்கள் தினம்
தலைமை ஏற்பவரின்
தாய் முதியோர் இல்லத்தில்.
தீவுகள்.
சிரிப்பே அறியாத அப்பா
சீரியலில் முழ்கும் அம்மா
சீர்திருத்தப் பள்ளியில் பிள்ளை.
சம்மந்தி.
சம உரிமை கொடுக்கனும்
சண்டை
தான் மட்டுமே போடனும்!
உணவியல்.
பசிக்குப் புசி
ருசிக்குப் புசித்தால்
பசிக்காது.
பயம்
எதிர் கால பயத்தால்
நிகழ்கால மகிழ்வைத்
தொலைப்பது!
கடன்.
தீர்க்க முடியாத கடன்
தினமும் மிரட்டும் கடன்
நன்றிக்கடன்!
பள்ளிக்கூடம்.
மாணவரிடம் ஆசிரியர்
பாடம் பயிலும்
இடம்.
வாழ்க்கை.
உலக இயல்புகளை
ஒழுங்காகப் புகட்டும்
பள்ளிக் கூடம்
இயற்கை.
உதிர உதிர
ஒய்ந்து போகாமல்
மீண்டும் துளிர்ப்பது.
பழங்கள்.
காய்த்த மரத்தை விட்டு
கை நழுவும்
சுய நலவாதி!
கண்கள்.
நிஜத்தை மட்டுமே
படம் பிடிக்கும்
நிழற்படக் கருவி.
அன்பு.
நமக்கு மட்டும் தேவைப் படுவது
மற்றவர்க்கு
மனமுவந்து கொடுக்காதது.
நெகிழ்வு.
பேருந்தில்
பெரிசுக்கு இடம் கொடுக்கும்
இளசு.
முட்கள்.
மற்றவர் துரோகம்
மறக்கமுடியாத
சோகம்.
முதியோர் இல்லம்.
முன்னாள் நினைவுகள்
முள்ளாய் குத்தும் நினைவுகள்
முதியோரின் மலரும் நினைவுகள்.
உறவுகள்.
கண்ணீர் கரிப்பது ஏன்?
உப்பாய் மாறிய இனிய
உறவுகளால்.
கனிவு.
கன்னிகளிடம் மட்டும்
களையர்
காட்டுவது!
ரவுசு.
மலரும் நினைவுகளால்
மனதை வருடும்
பெருசு!
வெருப்பு.
நம் குற்றம்
பிறர் கூறக்
கேட்கும் போது ஏற்படுவது.
நட்பு.
இருக்கண் களையும்
இம்சை
அரசர்கள்.
சமையல்.
மையலுடன் செய்தால்
மணக்கும்
மனமின்றி செய்தால் குமட்டும்!
பூக்கள்.
அன்னை பூமிக்குத்தூவும்
ஆசிர்வாத
அட்சதை.
ராகிங்.
சீனியர் ராகிங் மாமியார்
ஜுனியர் ராகிங் மருமகள்
மாட்டிக் கொண்டவன் புதிதாக மனமாணவன்.
தீவிரவாதம்.
தீவிரவாத ஊடுறுவல்
விடுப்புக்கு வந்த
வாண்டுகள்!
குழந்தை.
மரித்த மனம்
மீண்டும் உயிர்ப்பது
மழலையால்.
சுழற்சி.
நேற்றைய மலர்கள்
இன்றைய சருகுகள்
இன்றைய சருகுகள்
நாளைய உரங்கள்.
டி.வி.
நடு வீட்டில் அமர்ந்து
நம்மை நகர விடாது
நசுக்கிப் பிழியும் நம்மவர்.
இரவு மழை.
நிலா காதலனை காணாது
நெடு நேரமாக அழும்
மேகப் பெண்ணின் கண்ணீர்.
நட்சத்திரங்கள்.
நிலவுப் பெண்னணக்
கண்ணடிக்கும்
காளையர் கூட்டம்.
வறட்சி.
நெஞ்சில் இடிவிழுந்தாலும்
கண்ணீர் வழியாத
கன்னங்கள்.
பேதம்.
ஆண் குழந்தை வரவு
பெண் குழந்தை செலவு
இரண்டுமே ரத்த உறவு?
நாத்தீ.
அம்மாமாதிரி அண்ணி,ஆனாலும்
அண்ணி ஒரு மாதிரி என்று
அம்மாவிடம் பற்றவைப்பவள்.
பேரப்பிள்ளைகள்.
உன் பிள்ளை இல்லை
என் அப்பா என
உபதேசிக்கும் ஞான குரு.
தலைமுறை இடைவெளி.
முதுமைக்கும்
இளமைக்கும்
இடைப்பட்டதூரம்.
பயணம்.
வாழ்க்கை பெரும் பயணத்தின்
நடுவே செய்யும்
சிறுபயணம்.
வாகனம்.
துரித பயணம்
அதிக செலவு
தொடர் பராமரிப்பு.
நடைமுறை.
அரசியல் வாதிகளின் கதவடைப்பு
அராஜவாதிகளின்
கதவுடைப்பு?
முகம்.
நம்மைக் கையும் களவுமாய்க்
காட்டிக்கொடுக்கும்
கருங்காலி?
குனிவு.
எதிர் பாரத தலைகுனிவு!
ஏற்படுத்தியது யார்?
குட்டையான வாயிற்படி?
மனம்.
கண்டதையும்
அள்ளிப்போட்டுத்
திணறி வழியும் குப்பைகூடை.
பணிவு.
பெற்றோரின் மிரட்டலுக்குப் பணியாது
பெண்டாட்டியின் அதட்டலுக்குப்
பணிவது.
சுய நலம்.
அங்கெங்கு எனாதபடி
எங்கும்
நிறைந்திருப்பது.
இரு கண்கள்.
உன்னைக் கருவில் சுமந்தவலும்
உன் கருவைச்சுமப்பவலும்!!
பரிணாமம்.
குறங்கில் இருந்து மனிதன் பிறந்தான்
அது பரிணாம வளர்ச்சி. ஆனாலும்
மனம் மட்டும் இன்னும் குரங்காகவே
இது பரிணாம தளர்ச்சி!?
கடவுளின் கருவறை
தாயின் கருவறையும்
பள்ளி வகுப்பறையும்!!
மாற்றியோசி.
பள்ளிப் படிப்பு இல்லையா
பரவாயில்லை
பலர் படிக்க
பள்ளிகள் உருவாக்க யோசி!!
ஒதுக்கீடு: ஒதுக்கிவைப்போரிடமிருந்து
ஒட்டுமொத்தமாக
ஒதுங்கி நிற்பது
நடிப்பு:
நடிப்பவர்களைக்கண்டு
நம்பியது போல
நாமும் நடிப்பது.
வெறுப்பு:
சுய நலம் களைக்கண்டு
சுட்டெரிக்கும் வெய்யிலாய்
சுள்ளென்று ஏறுவது.
கசப்பு:
கடந்த கால காயங்கள்
மனக்கண் முன்
மறுபடி மறுபடி தோன்றுவது:
கயமை:
தான் வாழப்பிறரைத்
துன்புறுத்துவது.
பொய்மை:
தன் குற்றம் மறைத்து
மற்றவரைக் குற்றவாளி ஆக்குவது,
மெய்மை:
கஷ்டம் வந்தாலும்
கடைசி வரை
கடை பிடிப்பது.
துயரம்:
துஞ்சலிலும்
துஞ்சல் இல்லாத போதும்
நெஞ்சில் நெருடுவது.
பாவம்:
அடுத்துக் கெடுத்து
அடுத்தவர்பற்றி
அஞ்சாது பொய் உரைப்பது.
பலம்:
நெஞ்சில் உறுதியும்
நேர்மைத்திறனும்
நிர்மல மனமும்.
பலவீனம்:
பாசத்திற்குக் கட்டுப்பட்டு
பாவத்திற்குத் துணை போவது.
அவலம்:
இருந்தும் இல்லாத உறவுகள்
புரிந்தும் புரியாத வாழ்க்கை.
வேண்டுவது:
பற்றான் பற்றிணைப்
பற்றிடும்தெளிவு.
தூண்டுகோல்:
துரோகமும் அவமானமும்
ஜெயிக்கத்தூண்டும்
தூண்டுகோல்கள்.
தோல்வி.
ஜெயிக்கத்தூண்டும்
வெற்றிப்படிகள்.
நேர்மை:
மனசாட்சிக்கு
மனப் பூர்வமாக
மதிப்புகொடுப்பது.
அனுபவம்:
பாவத்தின் சம்பளம்
புண்ணியத்தின் வட்டி.
மகிழ்வு:
மனக் குமுறல்களை
மனசுக்குள் வைத்து
மனதார ரசிப்பது.
மன்னிப்பு:
மனதாரக் குற்றங்களை
மற்றவர் முன் ஒத்துக்கொள்வது
வாழ்க்கை:
குடும்ப நிலவரம்
மிகுந்த கலவரம்-இது
இறைவன் கொடுத்தவரம்??
எழுச்சி!!
வீழ்வது மீண்டும்
எழுவதற்கே,எழுவது
நிலைத்து நிற்பதற்கே
சரிவு
சரிவுகளை சந்திப்பது
சறுக்கி விழுவதற்கு அல்ல
சரித்திரத்தில் இடம் பிடிக்க!!
மழலை:
கொஞ்சும் சலங்கையை
மிஞ்சும் உன்
சிரிப்பொலி.
மோதல்:
பொய்யோடு மோதலாம்
மெய்யோடு மோத முடியாது!
மனிதன்:
மூச்சு விடுவதால் மட்டும் மனிதன் அல்ல
முயற்சிப்பவனே
முழுமனிதன்.
பொய்மை:
பொய்யான உடலுக்கு
மெய்யென்று
பொய்யான பெயரிட்டு
மெய்யாலும் ஏமாறும்,நாம்
பொய்மானைத் துரத்தும்
பொய் வேடதாரிகள்.எனும்
மெய்விதிர்க்கவைக்கும்
உண்மைதனை
உரைக்கிறேன்
உங்களிடம்!!
மானம்:
தன் மானம் குலைத்திடும்
அவமானம் எல்லாம்
வெகுமானம் ஆக்கிடும்
தீர்மான ஒன்று செய்திட்டால்
சன்மானம் நிச்சயம்!
எப்போதும் வெற்றிபெற:
ஒடுமீன் ஒட
உருமீன் வருமளவும்
வாடி நிற்கும் கொக்கென
வாய்ப்புக்காக-நீ
வாடி நிற்பாய் எப்போதும்!!
நேர நிர்வாகம்:
செல்லில் பேசவும்
சீரியல் பார்க்கவும்
நேரம் போதமையால்
செல்லாக்காசான
பெரிசுகளிடம் பேசாது
நேரம் சேமிக்கும்
சிறுசுகள்!!!
தனிக்குடித்தனம்:
ரகசியமாய் நடத்த
ராணுவப் புரட்சி!
கூட்டுக் குடித்தனம்:
சமஸ்தானங்களை இணைத்திடும்
சமரச முயற்சி!!
காரணப்பெயர்
ஆசையே
அழிவிற்குக் காரணம் என
அத்தனை மகாங்களும்
ஆசையை ஒழிக்க
ஆசைப்பட்டனர்
அத்தனை பேர்
ஆசைகளையும்
நிராசை ஆக்கியதால்
உன் பெயர்
ஆசைஅறுப்பவனோ???
சாதுமிரண்டால்:
சாதுவாக இரு
ஆனால்
சண்டியாக இருக்காதே!!!!
ரெளத்திரம்:
குரூரம் இல்லாத
கோபமும்
கொள்ளை அழகு!!!
சாதனை:
சோதனை வரும் முன்னே
சாதனை வரும் பின்னே.
எழுத்து:
வேலையல்ல
வேள்வி!
புரட்சி:
மண்ணைப்புரட்டு
மண்புழு
மரணிக்காமல்.
தேவை:
மரம் நடுவிழாவுடன்
மனிதம் நடுவிழாவும்
மக்களுக்குத் தேவை.
பொருள்:
வாழ்வதற்குப் பொருள் வேண்டும்
நாம்
வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
வெற்றிபெற.
சாதனை வரும் பின்னே
சர்ச்சை வரும் முன்னே.
தேவை:
வாழ்வதற்கு நிறைய
பணம் தேவை
வாழ்ந்தர்க்குத் தேவை
நல்ல நிருபணம்!!!
சிரிப்பு
உற்றாரை சுத்தமுறக்கழுவி
ஊராருக்கு இலை போடுவது.
குழப்பம்:
குட்டையைக்குழப்ப
ஒரு கல்
மனதைக் குழப்ப
ஒரு சொல்
சர்வாதிகாரி:
குறும்பு செய்யும்
குட்டிக்
குழந்தை!!!
கூட்டணி:
பசை உள்ளவரிடம்
பற்றிக் கொள்ளும்
நெருக்கம்!!!
சட்டசபை:
வெளி நடப்பு
செய்யும்
விடலைகள்!!!
ராணுவ ஆட்சி:
அடக்கு முறைசெய்யும்
அப்பா!
குடும்பம்:
அதிரடிப் படையான அப்பா
கொரில்லாப் படையான குழந்தைகள்
அமைதிப்படையான அம்மா!
அட்ஜஸ்மெண்ட்:
உரிமைகளை
உளப்பூர்வமாக
விட்டுக் கொடுப்பது.
ஜட்ஜ்மெண்ட்:
தனக்குப் பாதகம்
இல்லாமல்
வழங்குவது!
பார்லிமெண்ட்:
குடும்பப்பிரச்சனைகளை
குடும்பத்துடன்
அலசுவது!
மேல்சபை:
தீர்மானங்களை
முன்மொழியும்
முக்கியஸ்தர்கள்!
கீழ்சபை:
தீர்மானங்களை
வழிமொழியும்
வக்கற்றவர்கள்
சுயேச்சை:
கடைசிவரை
நேர்வழி நின்று
போராடு பவர்கள்.
அன்னபோஸ்ட்:
ஆளுமைத் திறன் உள்ள
அற்புத
அடக்குமுறைவாதி!
சப்மிட்:
கஷ்டங்களைக்
கடவுளிடம் சொல்லிக்
காத்திருப்பது.
நரகம்:
அன்பில்லாதவரிடம்
அடைக்கலமாக
அண்டிப்பிழிப்பது.
டார்ச்சர்:
அடித்து உதைப்பது மட்டுமல்ல
அலட்சியப் படுத்துவதும்!
அறியாமை:
சிறகுகளைச்
சிதைத்து என்னை
சிறைப்படுத்த எண்ணுகிறாய்
நான்பீனிக்ஸ் பறவை என்பதை
அறியாத நீ!
ஏவுகணை:
நெருங்கிய உறவுகள்
நேர்மறையாக
விமர்சிப்பது.
முப்படைத்தாக்குதல்:
ஊரும் உறவும்
நட்பும் நமக்கு
உபதேசிப்பது.
எல்லையோரபாதுகாப்புபடை:
அக்கம் பக்கத்து
அற்புத
நட்புகள்.
பாதுகாப்புபடை:
பாசமும் நேசமும்
உள்ள
உன்னத உறவுகள்
தற்கொலைப்படை:
காதல் இல்லையேல்
சாதல் எனும்
கொலை மிரட்டல்
தோட்டா:
சீறிப்பாய்ந்து வரும்
சினமிகு வார்த்தைகளின்
துளைப்பு.
கண்ணிவெடி:
நேரம் பார்த்து
காலைவாரிக்
கவிழ்ப்பது.
அணுகுண்டு வெடிப்பு:
சின்ன வீடு பற்றி
பெரியவீட்டுக்குத்
தெரியவருவது.
கொரில்லாத்தாக்குதல்:
உண்ணாவிரதம்
கடைப்பிடிக்கும்
உன்னத உறவுகள்.
திராவக வீச்சு:
இலக்கு பார்த்து
எறியப் படும்
வார்த்தை வீச்சு.
பேதமை:
தன்னைப்போல்
எல்லோரையும் எண்ணி
ஏமாறுவது.
போதை:
மதுவும்
மாதும்
புகழும்!
மேதை:
கயங்களில் இருந்து
கற்றுக் கொள்ளுபவன்
உபாதை:
மனசுக்குள்பூட்டிவைக்கும்
அவமானங்கள்.
கோலங்கள்:
வாழ்க்கை அலங்கார
நந்தவனம்.அதன் நடுவே
மகிழ்ச்சி நீருற்று.
சாதுர்யம்:
தப்புகளை
தப்பில்லாமல் செய்து
தப்பிப்பது!
பலப்பரீட்சை:
தவறுகளை ஒத்துக்கொள்வது
பலம்.ஒத்துக்கொள்ளமறுப்பது
பலவீனம்
சீனியர் சிட்டிசன்:
சீனியாரிட்டியில் மட்டுமல்ல
சின்சியாரிட்டியிலும்
முன்னிலை வகிப்பது.
மாற்றி யோசி:
பள்ளிப்படிப்பே இல்லையா
பலர் படிக்கப்
பள்ளிகள் உருவாக்கு!
புகழ்:
தேடி அலைவது அவமானம்
நாடி வருவதே வெகுமானம்!
மேம்பாடு:
உறவுகள் மேம்பட
உணர்வுகளில்
உனக்கு மேம்பாடு வேண்டும்.
காரியவாதி:
காரணம் ஆராயமல்
காசுக்காக
காரியம் ஆற்றுவது!
இதயம் துளைத்தப் போலி உறவுகளால்
இதயம் தொலைத்த எனக்கு
இதய நோய் என்கிறார் .
இதய நோய் மருத்துவர்.
இல்லாத இதயத்துக்கு
நோய் என்று
பொய்யாகக் கூறும் - இவர்
போலி மருத்துவரோ!!!
நன்றி
கனிமொழி இதழ்
கே.பாலசுந்தரி எம்.எ
மாங்குடி
சுனாமி
எங்கள் கழிவுகளை உன்னில்
கலக்கவிட்டதால் எங்களையே
கழிவுகளாய் உன்னில் மிதக்க விட்டாயோ?
வேடந்தாங்கல்
இனப்பெருக்கம் காண
ஏற்ற இடம் இதுவென
அயல் நாட்டுப் பறவைகள்
அத்தனையும் இங்கு வந்தாலும்
தன் குணம் மொழி மாறாமல்
தங்கி இருக்குது வேடந்தாங்கலில்
பணப் பெருக்கம் காணப்
பன்னாடு சென்ற மானுடப்
பறவைகள் மட்டும்
வேற்றுமொழி வெற்று ஆடம்பரம்
வேற்றுக் கலாச்சாரம் எனப் பொய்
வேட(ம் )ந்தாங்கல் ஏன் ?
கனிமொழி இதழ்
பாலசுந்தரி எம்.எ
எனக்குள் துளிர்த்தத் துளிப்பாக்கள்
முதியோர்
முன்னாள் நினைவுகள்
முள்ளாய் குத்தும் நினைவுள்
முதியோரின் மலரும் நினைவுகள்
பிரிவு
பழைய உறவு
பழசாய் ஆனதால்
புதிய உறவின் வரவு!
சரிவு
சரிவுகள் சறுக்கி விழ அல்ல
சடுதியில் மீண்டும்
சாதிக்க!
மறுபக்கம்
தாய்மார்களின் தினம்
தலைமை ஏற்பு
தாயைத் தள்ளி வைத்தவர்!
மருமகள்
மருமகளை மாமியார்
மறுமகளாய் நினைக்கணும்!
மருமகள் மாமியாரை
மாற்றாந்தாயாய் நினைக்கணும்!
மருமகன்
மாமனார்
மறுமகனாய் நினைக்கணும்!
சொத்தில் பங்கு கொடுக்கணும்!
முதியோர் பென்ஷன்
ஊழியம் செய்யாமலே
வாங்கும்
ஓய்வு ஊதியம்!
மரபியல்
மரபியல்கள் மாறாதது என்பதை
மறையிலக்கணமாய் தந்த
மகவுகள்!
மானுடயியல்
உனக்குப் பிடித்ததை
மற்றவர்க்கு செய்
உனக்குப் பிடிக்காததை
உன் எதிரிக்கும் செய்யாதே!
உதவி!
கேட்டது கொடுக்காதே!
கேட்காமலே கொடுத்துவிடு!
பரிணாமம்
தான் பெற்றோராய் ஆனதும்
தன்னைப் பெற்றவரை
உதறித் தள்ளும்
பெற்றெடுத்தப் பிள்ளைகள்!
பரிவு
உறவுகள் மீது மட்டுல்ல
மற்ற
உயிர்களிடமும்!
மழை
விண்ணிலிருந்து
மண்ணுக்குள் இறங்கும்
விழுதுகள்!
காலைச் சூரியன்
வைகறைப் பெண்ணின்
நாணிச் சிவந்த
கன்னம்!
மாலைச் சூரியன்
மாலைப் பெண்ணுக்கு
மஞ்சள் நீராட்டு விழா!
தூறல்
பூக்களுக்குப்
பூப்பு நீராட்டல்
நட்சத்திரங்கள்
வானவீதியில்
வைரக் கண்காட்சி
வைத்தது யார்?
மேகங்கள்
வானத் திரையில்
வண்ணமிகு கிராபிக்ஸ்
வடிவமைத்து யார்?
மனைவி
உண்மைகளை கண்டு பிடிக்கும்
உன்னத கருவி!
ஈவ்டீசிங்
நிலவுப் பெண்ணைக்
கண்ணடிக்கும்
நட்சத்திரக் காளையர்!
காதல்
கண் வழி புகுந்து
இதயம் தாங்கும்
கதிர்வீச்சு!
இடி-மின்னல்-மழை
வானக் கணவன்
மின்னலாய்ப் பாய்ந்து
இடியாய் வசை பாட
மேக மனைவியின் கண்களில்
அருவி!
குடும்பம்
சிரிப்பே அறியாத அப்பா
சீரியலில் மூழ்கும் அம்மா
சீர்திருத்தப் பள்ளியில் பிள்ளை
அம்மா
தொலைந்து போன
தொப்புள் கொடி
தொடர்பு
ஞானகுரு
உன் பிள்ளை இல்லை
என் அப்பா என்று
உணர்த்தும் பேரக் குழந்தைகள்
அகதிகள்
சொந்த நாட்டிலேயே
அகதிகளாக சிறுபான்மை
இனத்தோர்
சொந்த வீட்டிலேயே
அகதிகளாகப் பெரும்பான்மை
முதியோர்
பெண் சிசு
தாய்ப்பால் தவிர்க்கப்பட்டு
கள்ளிப்பால் புகட்டப்படும்
பெண்பால்
மன்னிப்பு
கேட்கத் தயங்குவது
கொடுக்க
மறுப்பது!
மறதி
நம்மை
ஏற்றிவிட்ட
ஏணி
வாரிசு
மனசுக்குள் பட்டாம்பூச்சி
மருமகள்
உண்டாகி இருக்கிறாள்
பாவம்
பெற்றவர்களைப் பட்டினி
போட்டு
மற்றவர்கள்
மனம் குளிர
விருந்து வைப்பது
கணவன்
கணிக்க முடியாத
வானிலை
அறிக்கை
பூமராங்
நம்முடைய பிழைகள்
நம்மையேத் திருப்பித்
தாக்குவது
பக்குவம்
கடந்த வந்த பாதையைக்
காலம் கடந்து
திரும்பிப் பார்ப்பது
கனிவு
கன்னியரிடம் மட்டும்
காளையர் கட்டாயம்
காட்டுவது
நன்றி
தந்த உதவி மறந்திடு
பெற்ற உதவி
மதித்திடு
முரண்.
தாய்மார்கள் தினம்
தலைமை ஏற்பவரின்
தாய் முதியோர் இல்லத்தில்.
தீவுகள்.
சிரிப்பே அறியாத அப்பா
சீரியலில் முழ்கும் அம்மா
சீர்திருத்தப் பள்ளியில் பிள்ளை.
சம்மந்தி.
சம உரிமை கொடுக்கனும்
சண்டை
தான் மட்டுமே போடனும்!
உணவியல்.
பசிக்குப் புசி
ருசிக்குப் புசித்தால்
பசிக்காது.
பயம்
எதிர் கால பயத்தால்
நிகழ்கால மகிழ்வைத்
தொலைப்பது!
கடன்.
தீர்க்க முடியாத கடன்
தினமும் மிரட்டும் கடன்
நன்றிக்கடன்!
பள்ளிக்கூடம்.
மாணவரிடம் ஆசிரியர்
பாடம் பயிலும்
இடம்.
வாழ்க்கை.
உலக இயல்புகளை
ஒழுங்காகப் புகட்டும்
பள்ளிக் கூடம்
இயற்கை.
உதிர உதிர
ஒய்ந்து போகாமல்
மீண்டும் துளிர்ப்பது.
பழங்கள்.
காய்த்த மரத்தை விட்டு
கை நழுவும்
சுய நலவாதி!
கண்கள்.
நிஜத்தை மட்டுமே
படம் பிடிக்கும்
நிழற்படக் கருவி.
அன்பு.
நமக்கு மட்டும் தேவைப் படுவது
மற்றவர்க்கு
மனமுவந்து கொடுக்காதது.
நெகிழ்வு.
பேருந்தில்
பெரிசுக்கு இடம் கொடுக்கும்
இளசு.
முட்கள்.
மற்றவர் துரோகம்
மறக்கமுடியாத
சோகம்.
முதியோர் இல்லம்.
முன்னாள் நினைவுகள்
முள்ளாய் குத்தும் நினைவுகள்
முதியோரின் மலரும் நினைவுகள்.
உறவுகள்.
கண்ணீர் கரிப்பது ஏன்?
உப்பாய் மாறிய இனிய
உறவுகளால்.
கனிவு.
கன்னிகளிடம் மட்டும்
களையர்
காட்டுவது!
ரவுசு.
மலரும் நினைவுகளால்
மனதை வருடும்
பெருசு!
வெருப்பு.
நம் குற்றம்
பிறர் கூறக்
கேட்கும் போது ஏற்படுவது.
நட்பு.
இருக்கண் களையும்
இம்சை
அரசர்கள்.
சமையல்.
மையலுடன் செய்தால்
மணக்கும்
மனமின்றி செய்தால் குமட்டும்!
பூக்கள்.
அன்னை பூமிக்குத்தூவும்
ஆசிர்வாத
அட்சதை.
ராகிங்.
சீனியர் ராகிங் மாமியார்
ஜுனியர் ராகிங் மருமகள்
மாட்டிக் கொண்டவன் புதிதாக மனமாணவன்.
தீவிரவாதம்.
தீவிரவாத ஊடுறுவல்
விடுப்புக்கு வந்த
வாண்டுகள்!
குழந்தை.
மரித்த மனம்
மீண்டும் உயிர்ப்பது
மழலையால்.
சுழற்சி.
நேற்றைய மலர்கள்
இன்றைய சருகுகள்
இன்றைய சருகுகள்
நாளைய உரங்கள்.
டி.வி.
நடு வீட்டில் அமர்ந்து
நம்மை நகர விடாது
நசுக்கிப் பிழியும் நம்மவர்.
இரவு மழை.
நிலா காதலனை காணாது
நெடு நேரமாக அழும்
மேகப் பெண்ணின் கண்ணீர்.
நட்சத்திரங்கள்.
நிலவுப் பெண்னணக்
கண்ணடிக்கும்
காளையர் கூட்டம்.
வறட்சி.
நெஞ்சில் இடிவிழுந்தாலும்
கண்ணீர் வழியாத
கன்னங்கள்.
பேதம்.
ஆண் குழந்தை வரவு
பெண் குழந்தை செலவு
இரண்டுமே ரத்த உறவு?
நாத்தீ.
அம்மாமாதிரி அண்ணி,ஆனாலும்
அண்ணி ஒரு மாதிரி என்று
அம்மாவிடம் பற்றவைப்பவள்.
பேரப்பிள்ளைகள்.
உன் பிள்ளை இல்லை
என் அப்பா என
உபதேசிக்கும் ஞான குரு.
தலைமுறை இடைவெளி.
முதுமைக்கும்
இளமைக்கும்
இடைப்பட்டதூரம்.
பயணம்.
வாழ்க்கை பெரும் பயணத்தின்
நடுவே செய்யும்
சிறுபயணம்.
வாகனம்.
துரித பயணம்
அதிக செலவு
தொடர் பராமரிப்பு.
நடைமுறை.
அரசியல் வாதிகளின் கதவடைப்பு
அராஜவாதிகளின்
கதவுடைப்பு?
முகம்.
நம்மைக் கையும் களவுமாய்க்
காட்டிக்கொடுக்கும்
கருங்காலி?
குனிவு.
எதிர் பாரத தலைகுனிவு!
ஏற்படுத்தியது யார்?
குட்டையான வாயிற்படி?
மனம்.
கண்டதையும்
அள்ளிப்போட்டுத்
திணறி வழியும் குப்பைகூடை.
பணிவு.
பெற்றோரின் மிரட்டலுக்குப் பணியாது
பெண்டாட்டியின் அதட்டலுக்குப்
பணிவது.
சுய நலம்.
அங்கெங்கு எனாதபடி
எங்கும்
நிறைந்திருப்பது.
இரு கண்கள்.
உன்னைக் கருவில் சுமந்தவலும்
உன் கருவைச்சுமப்பவலும்!!
பரிணாமம்.
குறங்கில் இருந்து மனிதன் பிறந்தான்
அது பரிணாம வளர்ச்சி. ஆனாலும்
மனம் மட்டும் இன்னும் குரங்காகவே
இது பரிணாம தளர்ச்சி!?
கடவுளின் கருவறை
தாயின் கருவறையும்
பள்ளி வகுப்பறையும்!!
மாற்றியோசி.
பள்ளிப் படிப்பு இல்லையா
பரவாயில்லை
பலர் படிக்க
பள்ளிகள் உருவாக்க யோசி!!
ஒதுக்கீடு: ஒதுக்கிவைப்போரிடமிருந்து
ஒட்டுமொத்தமாக
ஒதுங்கி நிற்பது
நடிப்பு:
நடிப்பவர்களைக்கண்டு
நம்பியது போல
நாமும் நடிப்பது.
வெறுப்பு:
சுய நலம் களைக்கண்டு
சுட்டெரிக்கும் வெய்யிலாய்
சுள்ளென்று ஏறுவது.
கசப்பு:
கடந்த கால காயங்கள்
மனக்கண் முன்
மறுபடி மறுபடி தோன்றுவது:
கயமை:
தான் வாழப்பிறரைத்
துன்புறுத்துவது.
பொய்மை:
தன் குற்றம் மறைத்து
மற்றவரைக் குற்றவாளி ஆக்குவது,
மெய்மை:
கஷ்டம் வந்தாலும்
கடைசி வரை
கடை பிடிப்பது.
துயரம்:
துஞ்சலிலும்
துஞ்சல் இல்லாத போதும்
நெஞ்சில் நெருடுவது.
பாவம்:
அடுத்துக் கெடுத்து
அடுத்தவர்பற்றி
அஞ்சாது பொய் உரைப்பது.
பலம்:
நெஞ்சில் உறுதியும்
நேர்மைத்திறனும்
நிர்மல மனமும்.
பலவீனம்:
பாசத்திற்குக் கட்டுப்பட்டு
பாவத்திற்குத் துணை போவது.
அவலம்:
இருந்தும் இல்லாத உறவுகள்
புரிந்தும் புரியாத வாழ்க்கை.
வேண்டுவது:
பற்றான் பற்றிணைப்
பற்றிடும்தெளிவு.
தூண்டுகோல்:
துரோகமும் அவமானமும்
ஜெயிக்கத்தூண்டும்
தூண்டுகோல்கள்.
தோல்வி.
ஜெயிக்கத்தூண்டும்
வெற்றிப்படிகள்.
நேர்மை:
மனசாட்சிக்கு
மனப் பூர்வமாக
மதிப்புகொடுப்பது.
அனுபவம்:
பாவத்தின் சம்பளம்
புண்ணியத்தின் வட்டி.
மகிழ்வு:
மனக் குமுறல்களை
மனசுக்குள் வைத்து
மனதார ரசிப்பது.
மன்னிப்பு:
மனதாரக் குற்றங்களை
மற்றவர் முன் ஒத்துக்கொள்வது
வாழ்க்கை:
குடும்ப நிலவரம்
மிகுந்த கலவரம்-இது
இறைவன் கொடுத்தவரம்??
எழுச்சி!!
வீழ்வது மீண்டும்
எழுவதற்கே,எழுவது
நிலைத்து நிற்பதற்கே
சரிவு
சரிவுகளை சந்திப்பது
சறுக்கி விழுவதற்கு அல்ல
சரித்திரத்தில் இடம் பிடிக்க!!
மழலை:
கொஞ்சும் சலங்கையை
மிஞ்சும் உன்
சிரிப்பொலி.
மோதல்:
பொய்யோடு மோதலாம்
மெய்யோடு மோத முடியாது!
மனிதன்:
மூச்சு விடுவதால் மட்டும் மனிதன் அல்ல
முயற்சிப்பவனே
முழுமனிதன்.
பொய்மை:
பொய்யான உடலுக்கு
மெய்யென்று
பொய்யான பெயரிட்டு
மெய்யாலும் ஏமாறும்,நாம்
பொய்மானைத் துரத்தும்
பொய் வேடதாரிகள்.எனும்
மெய்விதிர்க்கவைக்கும்
உண்மைதனை
உரைக்கிறேன்
உங்களிடம்!!
மானம்:
தன் மானம் குலைத்திடும்
அவமானம் எல்லாம்
வெகுமானம் ஆக்கிடும்
தீர்மான ஒன்று செய்திட்டால்
சன்மானம் நிச்சயம்!
எப்போதும் வெற்றிபெற:
ஒடுமீன் ஒட
உருமீன் வருமளவும்
வாடி நிற்கும் கொக்கென
வாய்ப்புக்காக-நீ
வாடி நிற்பாய் எப்போதும்!!
நேர நிர்வாகம்:
செல்லில் பேசவும்
சீரியல் பார்க்கவும்
நேரம் போதமையால்
செல்லாக்காசான
பெரிசுகளிடம் பேசாது
நேரம் சேமிக்கும்
சிறுசுகள்!!!
தனிக்குடித்தனம்:
ரகசியமாய் நடத்த
ராணுவப் புரட்சி!
கூட்டுக் குடித்தனம்:
சமஸ்தானங்களை இணைத்திடும்
சமரச முயற்சி!!
காரணப்பெயர்
ஆசையே
அழிவிற்குக் காரணம் என
அத்தனை மகாங்களும்
ஆசையை ஒழிக்க
ஆசைப்பட்டனர்
அத்தனை பேர்
ஆசைகளையும்
நிராசை ஆக்கியதால்
உன் பெயர்
ஆசைஅறுப்பவனோ???
சாதுமிரண்டால்:
சாதுவாக இரு
ஆனால்
சண்டியாக இருக்காதே!!!!
ரெளத்திரம்:
குரூரம் இல்லாத
கோபமும்
கொள்ளை அழகு!!!
சாதனை:
சோதனை வரும் முன்னே
சாதனை வரும் பின்னே.
எழுத்து:
வேலையல்ல
வேள்வி!
புரட்சி:
மண்ணைப்புரட்டு
மண்புழு
மரணிக்காமல்.
தேவை:
மரம் நடுவிழாவுடன்
மனிதம் நடுவிழாவும்
மக்களுக்குத் தேவை.
பொருள்:
வாழ்வதற்குப் பொருள் வேண்டும்
நாம்
வாழ்வதிலும் பொருள் வேண்டும்.
வெற்றிபெற.
சாதனை வரும் பின்னே
சர்ச்சை வரும் முன்னே.
தேவை:
வாழ்வதற்கு நிறைய
பணம் தேவை
வாழ்ந்தர்க்குத் தேவை
நல்ல நிருபணம்!!!
சிரிப்பு
உற்றாரை சுத்தமுறக்கழுவி
ஊராருக்கு இலை போடுவது.
குழப்பம்:
குட்டையைக்குழப்ப
ஒரு கல்
மனதைக் குழப்ப
ஒரு சொல்
சர்வாதிகாரி:
குறும்பு செய்யும்
குட்டிக்
குழந்தை!!!
கூட்டணி:
பசை உள்ளவரிடம்
பற்றிக் கொள்ளும்
நெருக்கம்!!!
சட்டசபை:
வெளி நடப்பு
செய்யும்
விடலைகள்!!!
ராணுவ ஆட்சி:
அடக்கு முறைசெய்யும்
அப்பா!
குடும்பம்:
அதிரடிப் படையான அப்பா
கொரில்லாப் படையான குழந்தைகள்
அமைதிப்படையான அம்மா!
அட்ஜஸ்மெண்ட்:
உரிமைகளை
உளப்பூர்வமாக
விட்டுக் கொடுப்பது.
ஜட்ஜ்மெண்ட்:
தனக்குப் பாதகம்
இல்லாமல்
வழங்குவது!
பார்லிமெண்ட்:
குடும்பப்பிரச்சனைகளை
குடும்பத்துடன்
அலசுவது!
மேல்சபை:
தீர்மானங்களை
முன்மொழியும்
முக்கியஸ்தர்கள்!
கீழ்சபை:
தீர்மானங்களை
வழிமொழியும்
வக்கற்றவர்கள்
சுயேச்சை:
கடைசிவரை
நேர்வழி நின்று
போராடு பவர்கள்.
அன்னபோஸ்ட்:
ஆளுமைத் திறன் உள்ள
அற்புத
அடக்குமுறைவாதி!
சப்மிட்:
கஷ்டங்களைக்
கடவுளிடம் சொல்லிக்
காத்திருப்பது.
நரகம்:
அன்பில்லாதவரிடம்
அடைக்கலமாக
அண்டிப்பிழிப்பது.
டார்ச்சர்:
அடித்து உதைப்பது மட்டுமல்ல
அலட்சியப் படுத்துவதும்!
அறியாமை:
சிறகுகளைச்
சிதைத்து என்னை
சிறைப்படுத்த எண்ணுகிறாய்
நான்பீனிக்ஸ் பறவை என்பதை
அறியாத நீ!
ஏவுகணை:
நெருங்கிய உறவுகள்
நேர்மறையாக
விமர்சிப்பது.
முப்படைத்தாக்குதல்:
ஊரும் உறவும்
நட்பும் நமக்கு
உபதேசிப்பது.
எல்லையோரபாதுகாப்புபடை:
அக்கம் பக்கத்து
அற்புத
நட்புகள்.
பாதுகாப்புபடை:
பாசமும் நேசமும்
உள்ள
உன்னத உறவுகள்
தற்கொலைப்படை:
காதல் இல்லையேல்
சாதல் எனும்
கொலை மிரட்டல்
தோட்டா:
சீறிப்பாய்ந்து வரும்
சினமிகு வார்த்தைகளின்
துளைப்பு.
கண்ணிவெடி:
நேரம் பார்த்து
காலைவாரிக்
கவிழ்ப்பது.
அணுகுண்டு வெடிப்பு:
சின்ன வீடு பற்றி
பெரியவீட்டுக்குத்
தெரியவருவது.
கொரில்லாத்தாக்குதல்:
உண்ணாவிரதம்
கடைப்பிடிக்கும்
உன்னத உறவுகள்.
திராவக வீச்சு:
இலக்கு பார்த்து
எறியப் படும்
வார்த்தை வீச்சு.
பேதமை:
தன்னைப்போல்
எல்லோரையும் எண்ணி
ஏமாறுவது.
போதை:
மதுவும்
மாதும்
புகழும்!
மேதை:
கயங்களில் இருந்து
கற்றுக் கொள்ளுபவன்
உபாதை:
மனசுக்குள்பூட்டிவைக்கும்
அவமானங்கள்.
கோலங்கள்:
வாழ்க்கை அலங்கார
நந்தவனம்.அதன் நடுவே
மகிழ்ச்சி நீருற்று.
சாதுர்யம்:
தப்புகளை
தப்பில்லாமல் செய்து
தப்பிப்பது!
பலப்பரீட்சை:
தவறுகளை ஒத்துக்கொள்வது
பலம்.ஒத்துக்கொள்ளமறுப்பது
பலவீனம்
சீனியர் சிட்டிசன்:
சீனியாரிட்டியில் மட்டுமல்ல
சின்சியாரிட்டியிலும்
முன்னிலை வகிப்பது.
மாற்றி யோசி:
பள்ளிப்படிப்பே இல்லையா
பலர் படிக்கப்
பள்ளிகள் உருவாக்கு!
புகழ்:
தேடி அலைவது அவமானம்
நாடி வருவதே வெகுமானம்!
மேம்பாடு:
உறவுகள் மேம்பட
உணர்வுகளில்
உனக்கு மேம்பாடு வேண்டும்.
காரியவாதி:
காரணம் ஆராயமல்
காசுக்காக
காரியம் ஆற்றுவது!