கலாம் உனக்கு சலாம்
ஆகட்டும் பார்க்கலாம்
அப்புறம் முடிக்கலாம்
எப்படி தடுக்கலாம்
என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம்
என்ற எதிர்மறை சிந்தனைகள் தடுக்கலாம்
என்ன சாதிக்கலாம்
என்று சிந்திக்கலாம்
சதிகளை சாகடிக்கலாம்
சகமனிதரை நேசிக்கலாம்
எல்லோரையும் ஊக்குவிக்கலாம்
புதுமைகள் படைக்கலாம்
புறம்கூறு வோரை ஒதுக்கலாம்
கனவு காணலாம் நிச்சயம் சாதிக்கலாம்
எண்டு சொன்ன அப்துல் கலாம்
உன் கனவு கட்டாயம் பலிக்கலாம்
அக்னியால் சிறகுகள் கருக்கலாம்
என்ற அடிப்படையிலேயே மாற்றி பார்க்கலாம்
"அக்னி(க்கே) சிறகுகள்" முளைக்கலாம்
எண்டு சாதித்த அப்துல் கலாம்
இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம்
வருங்கால இந்தியாவை வல்லரசு ஆக்கலாம்
உன் வழி நடக்கலாம்
உன்னையே வழிகாட்டியாக ஏற்கலாம்!!
நெஞ்சமெல்லாம் நீயே...!
நீல வானில் -
விண்கலம் ஏவிய
அப்துல்கலாம் - நீ!
அரசியல் வானிலும் -
அற்புதமாய் ஒளிர்ந்திட்டாய்
அரிய ஒண்கலமாய்!
வெங்கலமாய் உன் குரல் -
வெகுவாய் ஈர்த்தது
வெம்பி நின்ற இளைஞரை...
'கலாம்' காலம்
மாணவர்க்குப் பொற்காலம் - ஏழை
மனிதருக்கு நற்காலம்!
அடுத்த நாள் பார்க் 'கலாம்'
என்ற நம் அசட்டையை மாற்றி
நாமும் சாதிக் 'கலாம்' - என்ற
'கலாம்' - உனக்கு -
இந்தியர் அனைவரும் வைக்கிறோம். சலாம்!
அரசியல் ஞானியே!
அரிய விஞ்ஞானியே - எம்
அறிவுப் புதையலே - நீ!
விடை பெற்றுப் -
பதவி வில'கலாம்!' - ஆனாலும்
விலகுமோ உன் புகழ்!
எங்கள் வழிகாட்டியே
உனை வழியனுப்பி வைக்கிறோம் -
எம் விழி நீர் கூட்டியே!
நன்றி நவில்கிறோம்
ஐந்து ஆண்டு காலம் சிறப்புப் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் நம் ஜனாதிபதி அவர்களுக்கு நமது இதழின் சார்பாக இந்த நன்றி நவிலல்.
புரட்சியாளனே - நீ
புண்பட்ட இளைஞரின்
இதயத்துக்குப்
புனுகு தடவினாய் - உன்
புத்தகத்தால்
அக்னிச் சிறகுகளின்
அடிச்சுவட்டில்
அடி எடுத்து வைத்தோம்
அத்தனை பேரும்
சாதிமத பேதமின்றி
சாதிக்கலாம் என்ற
'கலாம்' உனக்கு எங்கள்
சலாம்!
கனவு கண்டால் எதுவும்
கைகூடும் என்றுரைத்தக்
கற்பனைவாதியே - உன்
கனவை
நனவாக்குவோம் கண்டிப்பாக
வளரும் நாட்டை
வளர்ந்த நாடாய் ஆக்கிடுவோம்
வளம் கொழிக்க
வைத்திடுவோம்
வல்லரசாய் மாற்றிடுவோம்
நம்மாலும் முடியும் - என
நம்மை நம்ப வைத்த
நாட்டின் முதற்குடிமகனே
உனக்கு
நன்றி!
நன்றி!!
நன்றி!!!
அப்புறம் முடிக்கலாம்
எப்படி தடுக்கலாம்
என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம்
என்ற எதிர்மறை சிந்தனைகள் தடுக்கலாம்
என்ன சாதிக்கலாம்
என்று சிந்திக்கலாம்
சதிகளை சாகடிக்கலாம்
சகமனிதரை நேசிக்கலாம்
எல்லோரையும் ஊக்குவிக்கலாம்
புதுமைகள் படைக்கலாம்
புறம்கூறு வோரை ஒதுக்கலாம்
கனவு காணலாம் நிச்சயம் சாதிக்கலாம்
எண்டு சொன்ன அப்துல் கலாம்
உன் கனவு கட்டாயம் பலிக்கலாம்
அக்னியால் சிறகுகள் கருக்கலாம்
என்ற அடிப்படையிலேயே மாற்றி பார்க்கலாம்
"அக்னி(க்கே) சிறகுகள்" முளைக்கலாம்
எண்டு சாதித்த அப்துல் கலாம்
இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம்
வருங்கால இந்தியாவை வல்லரசு ஆக்கலாம்
உன் வழி நடக்கலாம்
உன்னையே வழிகாட்டியாக ஏற்கலாம்!!
நெஞ்சமெல்லாம் நீயே...!
நீல வானில் -
விண்கலம் ஏவிய
அப்துல்கலாம் - நீ!
அரசியல் வானிலும் -
அற்புதமாய் ஒளிர்ந்திட்டாய்
அரிய ஒண்கலமாய்!
வெங்கலமாய் உன் குரல் -
வெகுவாய் ஈர்த்தது
வெம்பி நின்ற இளைஞரை...
'கலாம்' காலம்
மாணவர்க்குப் பொற்காலம் - ஏழை
மனிதருக்கு நற்காலம்!
அடுத்த நாள் பார்க் 'கலாம்'
என்ற நம் அசட்டையை மாற்றி
நாமும் சாதிக் 'கலாம்' - என்ற
'கலாம்' - உனக்கு -
இந்தியர் அனைவரும் வைக்கிறோம். சலாம்!
அரசியல் ஞானியே!
அரிய விஞ்ஞானியே - எம்
அறிவுப் புதையலே - நீ!
விடை பெற்றுப் -
பதவி வில'கலாம்!' - ஆனாலும்
விலகுமோ உன் புகழ்!
எங்கள் வழிகாட்டியே
உனை வழியனுப்பி வைக்கிறோம் -
எம் விழி நீர் கூட்டியே!
நன்றி நவில்கிறோம்
ஐந்து ஆண்டு காலம் சிறப்புப் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் நம் ஜனாதிபதி அவர்களுக்கு நமது இதழின் சார்பாக இந்த நன்றி நவிலல்.
புரட்சியாளனே - நீ
புண்பட்ட இளைஞரின்
இதயத்துக்குப்
புனுகு தடவினாய் - உன்
புத்தகத்தால்
அக்னிச் சிறகுகளின்
அடிச்சுவட்டில்
அடி எடுத்து வைத்தோம்
அத்தனை பேரும்
சாதிமத பேதமின்றி
சாதிக்கலாம் என்ற
'கலாம்' உனக்கு எங்கள்
சலாம்!
கனவு கண்டால் எதுவும்
கைகூடும் என்றுரைத்தக்
கற்பனைவாதியே - உன்
கனவை
நனவாக்குவோம் கண்டிப்பாக
வளரும் நாட்டை
வளர்ந்த நாடாய் ஆக்கிடுவோம்
வளம் கொழிக்க
வைத்திடுவோம்
வல்லரசாய் மாற்றிடுவோம்
நம்மாலும் முடியும் - என
நம்மை நம்ப வைத்த
நாட்டின் முதற்குடிமகனே
உனக்கு
நன்றி!
நன்றி!!
நன்றி!!!